மன்னார் மாவட்ட செயலகத்தில் சூரியப் பொங்கலும் உழவர் கௌரவிப்பும்

18 Jan, 2024 | 08:57 PM
image

மன்னார் மாவட்ட செயலக அலுவலர்களின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்தில் சூரியப் பொங்கலும் உழவர் கௌரவிப்பும் நேற்று புதன்கிழமை (17) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

மன்னார் மாவட்ட செயலாளர் க.கணகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது மன்னார் மாவட்ட ஐந்து பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து திறமைமிக்க உழவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

முசலி பிரதேச செயலகப் பிரிவிலிருந்து முகம்மது மஸ்தான் அப்துல் றகீம், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலிருந்து டேவிட் டபரேரா, மடு பிரதேச செயலகப் பிரிவிலிருந்து ஆறுமுகம் கணேசமூர்த்தி, மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து புதுக்கமத்தைச் சேர்ந்த மரிஷால் ஜெயதாஸ், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து செபமாலை லோறன்ஸ் பீரீஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்கு பணப்பரிசும் வழங்கப்பட்டது.

சூரிய பொங்கலைத் தொடர்ந்து, உழவர் கௌரவிப்பு, மன்னார் பனங்கட்டு கொட்டு பரதக் கலாலய நாட்டியப் பள்ளி மாணவிகளின் நடனம் மற்றும் 'சமூக வலைத்தளங்கள் இளைஞர்களுக்கு வரமா, சாபமா' எனும் தலைப்பில் பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08