நாட்டின் பல பகுதிகளில் குறைவடைந்திருந்த காற்றின் தரம் இன்று வியாழக்கிழமை (18) வழமைக்கு திரும்பும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்து காணப்பட்டது.
புதன்கிழமை (17) கொழும்பில் காற்றின் தரச்சுட்டெண் 100ஐ கடந்தது. மற்றைய பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 50க்கும் 100க்கும் இடையில் இருந்தது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.
திங்கட்கிழமை (15) பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டையைச் சூழவுள்ள காற்றின் தரச் சுட்டெண் 105 ஆகவும், யாழ்ப்பாணத்தில் 100 ஆகவும் பதிவாகியிருந்தது.
சர்வதேச காற்றுத் தரக் குறியீட்டின்படி காற்றின் தரக்குறியீடு 100ஐ கடப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM