பனியால் சூழ்ந்த டெல்லி ; விமான, ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு

Published By: Digital Desk 3

18 Jan, 2024 | 10:22 AM
image

இந்தியாவின்  தலைநகரான புதுடெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் விமானம் மற்றும் ரயில்  சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில்  வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்துள்ளது.

ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், பஞ்சாபின் அமிர்தசரசில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேற்கு இந்தியாவில் இமயமலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று முதல், 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 120 விமானங்கள் மிகவும் தாமதாக இயக்கப்பட்டன. அதேபோல 53 விமானங்கள் முழுவதுமாக இரத்து செய்யப்பட்டன.

ரயில் சேவையை பொறுத்த வரையில் மொத்தமாக 20 ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி தவிர கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் கடும் பனி மூட்டம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் ; hindustantimes

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் குற்றச்சாட்டு : பிரேசில் மனித...

2024-09-07 13:44:57
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க...

2024-09-07 09:48:04
news-image

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி...

2024-09-07 09:27:53
news-image

கென்யாவில் பாடசாலையில் தீ விபத்து ;...

2024-09-06 13:37:54
news-image

தென் சீனாவை நோக்கி நகரும் யாகி...

2024-09-06 10:26:35
news-image

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக...

2024-09-05 16:25:51
news-image

ஜேர்மனியில் முனிச் நகரத்தில் இஸ்ரேலிய துணை...

2024-09-05 17:00:20
news-image

கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம்...

2024-09-05 11:02:38
news-image

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு...

2024-09-05 06:26:56
news-image

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய...

2024-09-04 16:33:57
news-image

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு...

2024-09-04 12:19:41
news-image

பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி...

2024-09-04 10:31:05