உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும் : கோட்டாவின் முட்டாள்தனமான தீர்மானத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது - ஹிருணிக்கா

Published By: Digital Desk 3

18 Jan, 2024 | 09:32 AM
image

என் தந்தை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இது தனிமனித வெற்றியல்ல, முழு நாட்டின் வெற்றி, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும் என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாவின் முட்டாள்தனமான தீர்மானத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொது மன்னிப்பு அதிகாரத்தை எதிர்கால ஜனாதிபதிகள் துஷ்பிரயோகப்படுத்த கூடாது என்பதற்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என   உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் அவருக்கு மரண தண்டனையை  நடைமுறைப்படுத்தவும் நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக தீர்மானித்திருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று புதன்கிழமை (17) கொழும்பில் இடம்பெற்றது. 

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எனது தந்தை கொலை செய்யப்பட்டதன் பின்னர் நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் துரதிஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டோம். 

மிகவும் சோர்வடைந்தோம். இந்த விடயத்தில் எமக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள அதிகம் போராடினோம். 

எமக்கு பல்வேறு தரப்பினராலும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. நாட்டை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தினார்கள். 

சாட்சியாளர்களை சாட்சி கூற வேண்டாம் எனவும் அவர்களுக்கு பணமும் வழங்கினார்கள். ஆனால் நாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை.போராடினோம். நாட்டு மக்கள்  எமக்கு பக்க பலமாக இருந்தார்கள். 

எவ்வாறாயினும் எனது தந்தையின் விடயத்தில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இது தனிமனித வெற்றியல்ல. முழு நாட்டின் வெற்றியாகும். உண்மை ஒருநாள் வெல்லும் என்பதற்கு இது சிறந்த சான்றாகும். 

இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனக்குள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார். 

ஆனால் அது தவறு எனவும் சட்டத்துக்கு முரணானது எனவும் நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது. 

இந்த தீர்ப்பின் மூலம் குற்றவாளி ஒருவருக்கு  எவ்வளவு  அரசியல் பலம், ஊடக பலம்  காணப்பட்டாலும் இறுதியில் உண்மையே வெல்லும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் கோட்டாவின் முட்டாள்தனமான தீர்மானத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமன்னிப்பு அதிகாரத்தை எதிர்கால ஜனாதிபதிகள் துஸ்பிரயோகப்படுத்த கூடாது என்பதற்கு உயர்நீதிமன்ற  தீர்ப்பு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09