நாம் பிறக்கும்போது எழுதப்படும் ஜாதகத்தில் நாம் வாழ்நாள் முழுவதும் எத்தகைய கர்மாவுடன் பிறந்திருக்கிறோம் என்பதும், என்னென்ன வசதிகளுடன் வாழ்வோம் என்பதும் துல்லியமாக வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால், அதனை நவகிரகங்கள் சூட்சமமாக தங்களுக்குள் வைத்திருக்கும். ஜோதிட நிபுணர்கள் உங்களுடைய லக்னாதிபதி, திசை, புத்தி, கோட்சாரத்தில் நவக்கிரகங்களின் நிலைப்பாடு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து உங்களுக்கு நடந்த, நடக்கும் மற்றும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயங்களை குறித்து விவரிப்பர். ஆனாலும் எம்மில் சிலருக்கு இத்தகைய விடயங்கள் முழுமையாக பொருந்துவதில்லை.
இத்தகையவர்கள் தங்களது ஜாதகத்தை சோதிட நிபுணர்களிடம் காண்பித்து பரிகாரத்தை மேற்கொள்வதை விட, சோழி பிரசன்னம் என்ற முறையில் உங்களது நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும், அதற்கான பரிகாரத்தையும் தெரிந்துகொண்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஏனெனில், சோழி பிரசன்னம் பார்க்கும்போது உங்களுடைய ஜாதகத்தில் இல்லாத அல்லது ஜோதிட நிபுணர்களால் துல்லியமாக குறிப்பிட இயலாத பல சாபங்களையும் தோஷங்களையும் அவதானித்து எடுத்துரைக்க இயலும்.
குறிப்பாக, சோழி பிரசன்னத்தில் பிரேத சாபம், பித்ரு தோஷம், மாந்தி தோஷம், செய்வினை தோஷம், மாத்ரு தோஷம், சல்லிய தோஷம், கோ சாபம், பிராமணர் சாபம், பெண் மற்றும் பெண்மணிகளின் சாபம் போன்றவற்றை அறியலாம். இவை அனைத்தும் இந்த ஜென்மத்தில் நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்திருக்கும் பாவ காரியங்களாகும். இதனால் உங்களுக்கு நன்மை வழங்க வேண்டிய தேவதைகளின் கோபத்துக்கு ஆளாகி, அவர்களுடைய பரிபூரண ஆசி கிடைக்காமல், நெருக்கடிகளையும் அழுத்தங்களையும், அதனூடாக தோல்விகளையும் சந்தித்துக் கொண்டிருக்கக்கூடும்.
இத்தகைய சோழி பிரசன்னங்கள் பல வகை உண்டு. இவற்றில் 108 சோழிகளைக் கொண்டு பிரசன்னம் கேட்பதுதான் சிறப்பு என்பதே ஜோதிட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், இத்தகைய சோழி பிரசன்னத்தின் மூலம் கண்டறியப்படும் தோஷங்களுக்கும் பாவங்களுக்கும் பரிகாரங்கள் என்பது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில், குறிப்பிட்ட திசையில் இருக்கும் ஆலய வழிபாடுகள் தான் அல்லது ஆலயத்தில் உள்ள பிரத்தியேக இறை வழிபாடுகள்தான் முதன்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.
சோழி பிரசன்னம் பார்த்தவர்கள் அதன் பிறகு சோழியை பற்றிய புதிய பார்வையை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்வதுண்டு. ஏனெனில், சோழி என்பது கடலிலிருந்து கிடைக்கும் பொருள். இவற்றுக்கு சூட்சுமமான இறை சக்தி உண்டு. அதாவது சோழி 'மகாலட்சுமியின் அம்சம்' என இந்து மத புராணங்கள் மற்றும் எம்முடைய சோதிட நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சோழியை நீங்கள் உங்களுடைய பூஜை அறையில் குறைந்தபட்சம் ஐந்து என்ற எண்ணிக்கையில் வைத்து வெள்ளிக்கிழமைகளில் பிரத்யேகமாக வழிபாடு செய்தால், செல்வ வளம் குறையாமல் மேன்மை அடையும்.
வெகு சிலர் மட்டுமே இந்த சோழியின் பிரத்யேக மகிமையை உணர்ந்திருக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய ஆன்மிக குருவின் வழிகாட்டலின்படி, சனிக்கிழமைகளில் காலை நேரத்தில் ஒரே ஒரு சோழியை தானமாக கொடுத்து, தானம் பெற்றவர்களையும் அதிர்ஷ்டசாலியாக்கிவிடுவர். இத்தகைய சோழி தானத்தின் மூலம் எதிராளியின் செல்வ நிலை உயரும்போது, உங்களுடைய செல்வ நிலையும் முன்பை விட இரு மடங்கு உயர்வதையும் காணலாம்.
எனவே உங்களுக்கு வாழ்க்கையில் விவரிக்க இயலாத பிரச்சினைகளோ நெருக்கடிகளோ அழுத்தங்களோ இருக்கும்போது, அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் சோழி பிரசன்னத்தை பார்த்து, அதனூடாக உங்களின் கர்மாவையும் காரணத்தையும், அதற்கான பரிகாரத்தையும் கண்டறிந்து, அதனை முழுமையான நம்பிக்கையுடன் மேற்கொண்டு, பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியான மனநிலையில் வாழ்வை வாழத் தொடங்குங்கள்.
தகவல் : ஜோதிலிங்கம்
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM