இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இசான் சர்மாவின் செயலால் ஆஸி அணியின் தலைவர் ஸ்மித் கடுப்பாக்கியதுடன், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கலகலப்பாகியுள்ளார்.

இந்திய மற்றும்  ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்  இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது.

இதன் போது ஆஸி அணியின் தலைவரான ஸ்மித்தை சீண்டுவதற்காக இசான் சர்மா ஒரு சில சைகைகளை மேற்கொண்டார். 

இதன் போது ஸ்மித் சற்று கோபமடைந்தார் எனினும்  அவர் கோபத்தை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. எனினும் இந்திய அணியின் தலைவர் இசான் சர்மாவின் செய்கையை பார்த்து கலகலப்பாகினார். அதுமாத்தரமின்றி மைதானமே கலகலப்பாகியது.

இந்நிலையில் இசான் சர்மாவின் குறித்த சைகையை டுவிட்டர் வலைத்தளத்தில் கலாய்த்து மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வருகின்றது.

இதேவேளை இன்றைய ஆட்டநேர முடிவின்போது ஆஸி அணி 6 விக்கட்டுகளை இழந்து 237 ஓட்டங்களை பெற்றதுடன், இந்திய அணி முதல் இன்னிங்ஸில்  189 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.