பொலிவூட்டில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ்

17 Jan, 2024 | 05:20 PM
image

சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை வென்ற தமிழில் முன்னணி நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் பெயரிடப்படாத ஹிந்தி திரைப்படத்தின் மூலம் பொலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ஜீவா நடிப்பில் வெளியான 'கீ' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய ஹிந்தி திரைப்படத்தில் பொலிவூட்டின் இளம் நட்சத்திர நடிகரான வருண் தவான் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தென்னிந்திய நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவருடன் முக்கிய வேடத்தில் நடிகை வாமிகா கபி நடிக்கிறார். 

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'தெறி' எனும் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் இந்த திரைப்படத்தை அப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான அட்லீ, ஜியோ ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை ஹிந்தியில் தயாரிக்கிறார்.

இதற்கான தொடக்க விழா அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இதன்போது படக்குழுவினர் பங்குபற்றினர். ஹிந்தி திரையுலகிலிருந்து ஏராளமான முக்கிய  பிரபலங்கள் பங்குபற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவானும், சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், எமி ஜேக்ஷன் கதாபாத்திரத்தில் வாமிகா கபியும் நடிக்கிறார்கள் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45