மாலைதீவு, இலங்கையில் “ஹெபடைடிஸ் பி” கட்டுப்பாட்டுக்குள்

Published By: Digital Desk 3

17 Jan, 2024 | 01:49 PM
image

மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் 'ஹெபடைடிஸ் பி” நோயை கட்டுப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று புதன்கிழமை (17) அறிவித்துள்ளது.

இரண்டு நாடுகளும் அதிகளவான குழந்தைகளுக்கு  ஹெபடைடிஸ் பி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை மற்றும் நோயினால் குறைந்தளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளமை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"சுகாதாரத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்த நாட்டு மக்கள் சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், மாலைதீவு மற்றும் இலங்கையின் சாதனைக்கு நான் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.

ஹெப்படைடிஸ் பி என்பது ஹெப்படைடிஸ் பி வைரஸால் ஏற்படும் தொற்று நோய் ஆகும். இது கல்லீரலைப் பாதிக்கிறது மற்றும் கடுமையான (குறுகிய கால) அல்லது நாள்பட்ட (நீண்ட கால) நோயை ஏற்படுத்தலாம். குழந்தைகளிடையே நீண்டகால தொற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேச்சரத்தின் கொடியேற்றம்!

2025-02-13 17:39:48
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24
news-image

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல்...

2025-02-13 16:55:46
news-image

மின்சார துண்டிப்பு - திருமண மண்டப...

2025-02-13 16:37:11