நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஜனவரி 24இல்!  

17 Jan, 2024 | 12:03 PM
image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. அதற்கான பிரதிஷ்டா கிரியைகள் இன்று புதன்கிழமை (17) அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமானது. 

தொடர்ந்து, எதிர்வரும் 21.01.2024 அன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கு உரிய தூபதீபம், யந்திர ஸ்தாபனங்கள், பரிவார மூர்த்திகள், பிரம்ஸ்தாபனம், அர்த்தபந்தண சாத்தல் இடம்பெறும். 

அதனை தொடர்ந்து, எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07 மணி முதல் மறுநாள் செவ்வாய்க்கிழமை (23) மாலை 05 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும். 

அதனை தொடர்ந்து, மறுநாள் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 09.38 மணி முதல் முற்பகல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 

அன்றைய தினம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயத் திரும்சமத் குண்டபக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேச கிரியைகளை நடாத்துவதற்காக 27 சிவாச்சாரியார்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு...

2026-09-15 06:02:11
news-image

வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

2026-09-14 18:49:38
news-image

கொழும்பில் ‘EOLLLIM 2026’ கொரிய கலாசார...

2026-09-14 13:51:56
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 17:20:18
news-image

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி...

2026-09-13 11:50:42
news-image

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா...

2026-09-13 10:50:11
news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40