2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளின் சில வினாக்களும் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடக ஊடகங்களில் வெளியானதைக் கண்டறிந்ததைத் அடுத்த குறித்த பரீட்சை பரீட்சைகள் திணைக்களத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாம் பகுதி வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் வெளியானதால் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த குறித்த பரீட்சையும் இரத்து செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
அதன்படி, பாட எண் 8 இன் கீழ் உள்ள விவசாய விஞ்ஞானப் பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாள் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரையில் நடைபெறும்.
அத்துடன், முதலாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.
பரீட்சை தொடர்பான விபரங்கள் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அந்தந்த அதிபர்களுக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM