முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற் சங்கங்களை நிறுவுவதற்கான இடைக்கால வழிநடத்தல் குழு ஸ்தாபிப்பு!

Published By: Vishnu

16 Jan, 2024 | 07:02 PM
image

நாட்டில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட 'கரு சரு' திட்டத்தின் ஊடாக முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்கங்களை நிறுவுவதற்கான இடைக்கால வழிநடத்தல் குழு இன்று (16) முதற்கட்டமாக ஸ்தாபிக்கப்பட்டது.

தொழில் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில் நடைபெற்ற துறைசார் குழுக்களை நிறுவது  தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான நிபுணத்துவ சபை ஸ்தாபிக்கப்படும் வரை இந்த  இடைக்கால வழிநடத்தல் குழு முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில்சார் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

இதன்போது நாடு முழுவதிலும் செயற்பட்டுவரும் அனைத்து முச்சக்கரவண்டிச் சாரதிகளின் சங்கங்களின் பிரதிநிதிகளையும்  உள்ளடக்கிய இந்த இடைக்காலக் குழுவில், அவர்களின் தொழில் கௌரவத்தையும், வளர்ச்சியையும்  மேம்படுத்துவது தொடர்பாக இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் அடங்கிய பிரேரணை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது

இப்பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு முச்சக்கரவண்டி சாரதிகளாக பணிபுரியும் அனைவரையும் தரவு அமைப்பில் பதிவு செய்து மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய  கியூ.ஆர். குறியீட்டு முறையயை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியார் துறை காப்புறுதி நிறுவனங்களோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினரும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள். அவ்வாறே நாட்டில் தற்போதுள்ள சமூக பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும்  புதிய சமூக பாதுகாப்பு முறைமைகள் என்பன அரசின் கண்காணிப்பில்  நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர்...

2024-11-11 14:59:25
news-image

கொழும்பு - குருணாகல் வீதியில் விபத்து...

2024-11-11 14:19:12
news-image

புதிய அங்கத்தவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும்...

2024-11-11 14:35:02
news-image

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருகை...

2024-11-11 14:14:31
news-image

பலமான மாற்றுத் தெரிவு சங்கு சின்னமே...

2024-11-11 14:14:59
news-image

புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள்...

2024-11-11 13:16:29
news-image

இந்திய - இலங்கை மீனவர் சங்கங்களின்...

2024-11-11 13:36:03
news-image

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு...

2024-11-11 13:19:08
news-image

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்...

2024-11-11 12:17:54
news-image

பொதுத் தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு...

2024-11-11 12:39:13
news-image

9 வயது சிறுவனுக்கு பலாத்காரமாக கசிப்பு...

2024-11-11 12:20:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-11 12:28:29