இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் மாற்றி அமைத்துக் கொண்டு வாழ்க்கை நடைமுறையின் காரணமாகவும், பின்பற்றி வரும் நவீன உணவு முறையின் காரணமாகவும் இளம் வயதிலேயே இதய பாதிப்பிற்கு ஆளாகி மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.
இந்நிலையில் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புக்கு இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது தான் முதன்மையான காரணமாக இருக்கிறது.
இதனை தவிர்க்க இயலுமா? என நடைபெற்ற ஆய்வில் மருத்துவ நிபுணர்கள் முக்கியமான விடயத்தை கண்டறிந்திருக்கிறார்கள்.
எம்முடைய உடலின் இயக்கத்திற்கு இதயத்தின் ஊடாக நடைபெறும் ரத்த ஓட்டமே பிரதான காரணி. இந்த ரத்த ஓட்டம்.. ரத்தக் குழாய்களில் இயல்பான அளவைவிட கூடுதலான அளவிற்கு கொழுப்புகள் படிவதால் தடை ஏற்பட்டு, இதயத்தை இயங்க விடாமல் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, உயிரிழப்பை உண்டாக்குகிறது.
இந்நிலையில் இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவம் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் ஆய்வு நடத்தியதில்.. இவர்கள் ரீஃபைண்ட் கொர்போஹைட்ரேட்ஸ் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட கொர்போஹைட்ரேட் மாவுச் சத்துள்ள உணவுப் பொருட்களை உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் எனவும் , இதன் காரணமாகவே இவர்களின் இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவம் தங்கி மாரடைப்பை ஏற்படுத்துகிறது எனவும் கண்டறிந்தனர்.
இதன் காரணமாக இதயத்தில் உள்ள ரத்த குழாய்களில் கொழுப்பு படிவம் தேங்காமல் இருக்க, ரீஃபைண்ட் கொர்போஹைட்ரேட்ஸ் சத்துள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, மைதா மாவினால் செய்யப்பட்ட வெதுப்பகத்தில் விற்பனையாகும் பாண் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், பரோட்டா போன்றவற்றை உறுதியாக தவிர்க்க வேண்டும்.
இதற்கு மாற்றாக முழு தானிய உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கோதுமை, கைக்குத்தல் அரிசி போன்ற முழு தானியங்களை உணவாக உட்கொள்ளும்போது இவை இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். எனவே இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என விரும்பினால், வாழ்க்கை முழுவதும் ரீஃபைன்ட் கொர்போஹைட்ரேட்ஸ் எனும் சத்தினை தவிர்க்க வேண்டும்.
வைத்தியர் சிவபிரகாஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM