ராகு - கேது தடைகளை அகற்றுவதற்கு எளிய வாழ்வியல் பரிகாரங்கள்

16 Jan, 2024 | 05:23 PM
image

எம்முடைய வாழ்வில் பலரும் கடும் உழைப்பை கொடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரே வட்டத்திற்குள் சிக்கி.. அதிலேயே சுழன்றும், உழன்றும் கொண்டிருப்பார்கள்.

முன்னேற்றம் என்பது சிறிதும் இல்லாமல் தேக்கமடைந்து இருப்பார்கள். இவர்கள் தங்களுடைய குடும்ப ஜோதிடரிடம் இதற்கான காரணத்தை கேட்டால்.. அவர்கள் கேது பகவானும், ராகு பகவானும் தான் தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று சுட்டிக் காட்டுவார்கள். அத்துடன் இதற்கான எளிய பரிகாரங்களையும் அவர்கள் முன் மொழிவார்கள்.

பொதுவாக கேது என்பது பை அல்லது சுருக்கு பையை குறிக்கும். மேலும் கேது என்பது ஞானத்தையும் குறிக்கும் என்பதால் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு குறிப்பாக அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அவர்கள் தங்களது  புத்தகத்தை சுமந்து செல்லும் புத்தகப் பையினை தானமாக வழங்கினால்.. கேதுவின் தடைகள் அகன்று நன்மை பயக்கும்.

இதனை மட்டும் பயன்படுத்தாமல் வீதியோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மழைக்காலங்களிலும், அல்லது பருவம் தப்பிய காலங்களிலும் நுளம்புவின் கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள இதற்காக உருவாக்கப்பட்ட சுருள்வர்த்தியை தானமாக வழங்கலாம்.

மேலும் கேது என்பது துறவறம் கொண்டவர்களையும், துறவறம் பூண்டு வாழும் சாதுக்களையும், சாமியார்களையும் குறிக்கும். இதனால் உங்களது வீட்டிற்கு அருகில் வாழும் சாதுக்களுக்கு அல்லது துறவறம் உண்டு இறை ஊழியம் செய்யும் சாமியார்களுக்கு.. செவ்வாய்க்கிழமைகளில் காவி வண்ணத்திலான வஸ்திரத்தை தானமாக வழங்கினாலும்.. கேதுவின் தாக்கத்திலிருந்து தப்பித்து, நன்மை பயக்கும்.

கேது என்பது சுருள் வடிவத்தை குறிப்பதால் சுருள் வடிவில் உள்ள பரோட்டா உணவையும் மதிய நேரங்களில் ஏழைகளுக்கு தானமாக வழங்கினாலும்.. கேதுவின் தோஷம் நீங்கி, ஆசி கிடைக்கும்.

மேலும் கேது மற்றும் ராகுவினால் தடைகள் ஏற்பட்டிருந்தால்.. புதன்கிழமை இரவு நீங்கள் ஒரு தேங்காயை வாங்கி வைத்துக் கொண்டு உறங்கும் முன் அந்த தேங்காயை இரண்டு கைகளுக்குள் வைத்துக் கொண்டு, உங்களுக்கான தடை விலக வேண்டும் என்று பிரார்த்தித்து, அதனை உங்களுடைய தலைமாட்டில் வைத்து உறங்கி விட வேண்டும். 

காலையில் எழுந்ததும் நீராடி, அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள குருக்களுக்கு பிரார்த்தனை செய்து கொண்ட தேங்காயுடன் குறிப்பிட்ட அளவு தட்சணையையும் ( 51..101., 201, 501..என உங்களின் பொருளாதார சக்திக்கு ஏற்ற அளவு) வைத்து அவருக்கு தானமாக வழங்கி விட வேண்டும். இது போல் தொடர்ந்து ஏழு வாரங்களுக்கு  தேங்காயை தட்சணையுடன் தானமாக வழங்கினால்.. நீங்கள் நினைத்த காரியம், நினைத்தபடியே நடந்திடுவதை கண்டு வியப்படைவீர்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11
news-image

துயர் களையும் தீப பரிகார வழிபாடு

2024-04-01 17:32:20
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்களை விலக்கி,...

2024-03-24 21:02:46
news-image

சனி தோஷத்தை நீக்கும் ஆலய பரிகாரம்..!

2024-03-20 09:18:25