தேயிலை உரங்களின் விலை 2,000 ரூபாவால் குறைப்பு - மஹிந்த அமரவீர

16 Jan, 2024 | 05:23 PM
image

தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற T 750, T 709 மற்றும் T 200 தேயிலை உரங்களின் விலையை 2,000 ரூபாவால் குறைப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (16) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை முன்வைத்துள்ளார்.

இதன்படி சந்தையில் உள்ள தேயிலை உரங்களின் விலையானது 100 க்கு 50 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது.

தற்போது விற்பனை நிலையங்களில் உள்ள தேயிலை உரங்களின் ஒரு மூடையின் மொத்த விலை 13,000 ரூபாவாகும்.

இந்நிலையில் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற T 750 மற்றும்  T 709 உரங்களின் ஒரு மூடை விலை 7,735 ரூபாவாகவும் T 200 உரத்தின்  ஒரு மூடை விலை 5,500 ரூபாவாகவும் குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த 2,000 ரூபா உரச்சலுகைகள் அனைத்து தேயிலை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து உரங்களின் வகைகளும் தேயிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு 9,735 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது.

இந்த உரச்சலுகைகளுக்கு மேலதிகமாக தேவைப்படும் 1,200 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலை சபை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42