நடிகர் சிபி சந்திரன் கதையின் நாயகனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'இடி மின்னல் காதல்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான ஆர். மாதவன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'இடி மின்னல் காதல்'. இதில் சிபிச்சந்திரன், யாஸ்மின் பொன்னப்பா, பவ்யா தரிக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயச்சந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். டி பாலசுப்ரமணியன் கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை அந்தோணி கையாண்டிருக்கிறார்.
காதலை மையப்படுத்தி பொழுது போக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பவாகி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயச்சந்தர் மற்றும் பாலாஜி மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாயகன் சிபி சந்திரனின் எக்சன் அவதார தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இதனிடையே நடிகர் சிபி சந்திரன், 'வஞ்சகர் உலகம்' எனும் படத்தின் மூலம் கதையின் நாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் என்பதும், விஜயின் 'மாஸ்டர்', சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', அஜித்தின் 'துணிவு' ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பதும், இப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM