சூர்யா நடிக்கும் 'கங்குவா' திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

16 Jan, 2024 | 05:12 PM
image

தமிழ் திரையுலகின் சக்தி வாய்ந்த முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகும் 'கங்குவா' எனும் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கங்குவா'. இதில் சூர்யா, பொலிவுட் நடிகை திஷா படானி, பொலிவுட் நடிகர் பாபி தியோல், நட்டி என்கிற நட்ராஜ், ஜெகபதிபாபு, யோகி பாபு  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஜேனரில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.ஈ. ஞானவேல் ராஜா, வம்சி -பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் பங்களிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து விரைவில் படபிடிப்பு நிறைபடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பார்வை பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது.  

இதில் சூர்யாவின் இரண்டு வேடங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதும், அவை வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் அவருடைய ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் வெளியாகிறது என்பதும், படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right