தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'தங்கலான்' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தங்கலான்'. இதில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி, ஹரிகிருஷ்ணன், முத்துக்குமார் மற்றும் ஹொலிவுட் நடிகர் டேனியல் கல்டாகிரெய்ன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய கோலார் தங்க வயலைச் சார்ந்த 'தங்கலான்' எனும் சுதந்திர போராட்ட வீரரை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படம் இம்மாதம் 26 ஆம் திகதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. பின்னர் தவிர்க்க இயலாத காரணத்தினால் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே இந்த திரைப்படம் எந்த தருணத்தில் வெளியானாலும் இந்திய திரையுலகில் பாரிய அதிர்வை ஏற்படுத்தும் என திரையுலகினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM