AI தொழில்நுட்ப வலுவூட்டப்பட நாட்காட்டியை வெளியிட்டுள்ளது மக்கள் வங்கி 

Published By: Vishnu

16 Jan, 2024 | 04:08 PM
image

இலங்கையில் டிஜிட்டல் வங்கிச் சேவையில் முன்னணியில் திகழும் மக்கள் வங்கி, 2024 புத்தாண்டுக்காக AI தொழில்நுட்பத்தால் இயங்கும் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன டிஜிட்டல் வங்கிச்சேவை வசதிகளை வழங்குவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் மக்கள் வங்கி, பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட புதிய அனுபவத்தை அனைத்து இலங்கையர்களுக்கும் வழங்கும் நோக்கில் இந்த நாட்காட்டியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

கடல் சூழலைப் பாதுகாப்பது மற்றும் அங்குள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்துடன் ‘Our OCEAN, OUR PRIDE’ என்ற தொனிப்பொருளின் கீழ் மக்கள் வங்கி தனது நாட்காட்டியை உருவாக்கியுள்ளது.

நீல திமிங்கலங்கள், ஆமைகள், டொல்பின்கள் மற்றும் பவளப்பாறைகளின் புகைப்படங்கள் இதில் அடங்கும். Google Play Store அல்லது Apple App store மூலம் தற்போதைய பக்கத்தைப் பதிவிறக்கம் செய்து, மக்கள் வங்கியின் நாட்காட்டியை ஸ்கேன் செய்வதன் மூலம், AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நேரலை வடிவில் தொடர்புடைய காட்சிகளைக் காணலாம். மேலும், இதைப் பற்றிய கூடுதல் தகவல் விபரங்களை அறியவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக, மக்கள் வங்கியானது வங்கிச்சேவை மற்றும் நிலைபேற்றியலை ஒருங்கிணைத்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அது தொடர்பான விபரங்களை AI நாட்காட்டியை பயன்படுத்துவதன் மூலமாக அறிந்து கொள்ளுமாறு நீங்கள் அனைவரும் அழைக்கப்படுகிறீர்கள்.

இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கி, ரூபா 3 டிரில்லியனுக்கும்  அதிகமான சொத்துக்களையும், ரூபா 2.5 டிரில்லியனுக்கும் அதிகமான வைப்புத்தொகைகளையும் திரட்டியுள்ளது, நாடு முழுவதும் 747 கிளைகள் மற்றும் சேவை மையங்கள் மற்றும் 290 சுய வங்கிச்சேவைப் பிரிவுகள் கொண்ட மிகப்பெரிய வலையமைப்புடன் 14.7 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகின்றது. 

வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்றவாறு பரந்த அளவிலான நிதிச் சேவைகள் மற்றும் விசேட வங்கிச்சேவை வசதிகளை வழங்கும் மக்கள் வங்கி, பொறுப்புள்ள அரச வங்கியாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right