இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 24 இந்திய மீனவர்களை இன்று இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி கச்சைத்தீவு - தலைமன்னார் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள்  மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை  காங்கேசன்துறை கடற்பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் 4 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.