நூறு நகர் திட்டத்திற்கு இவ்வருட வரவு - செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

15 Jan, 2024 | 07:08 PM
image

நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேற்படி விதிமுறைகளுடன் 9 திட்டங்களின் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது.

கம்பஹா, மினுவாங்கொடை, பாணந்துறை, அலவ்வ, ஹொரண மற்றும் அவிசாவளை பொதுச் சந்தைகளின் அபிவிருத்தி, வரக்காபொல மற்றும் முல்லைத்தீவு பேருந்து நிலையங்களின் அபிவிருத்தி, நிந்தவூர் கடற்கரைப் பூங்கா நிர்மாணம் ஆகியன இந்தத் திட்டங்களாகும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த வருட இறுதிக்குள் உரிய வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் பரவியுள்ள வசதிகள் குறைவான நகரங்களை கண்டறிந்து, அவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அந்த நகரங்களை முறையாக அழகுபடுத்தும் நோக்கில், நூறு நகர அபிவிருத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது 2021ஆம் ஆண்டு  ஆரம்பத்தில், 100 சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன, ஆனால் பின்னர் அது 116 நகரங்களாக அதிகரித்தது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த 116 நகரங்களின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்தன. அதற்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 1,620 மில்லியன் ரூபா.

நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டிற்கான அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 156 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொதுச் சந்தைகள், பேருந்து நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், நடைபாதைகள், பல்நோக்கு கட்டிடங்கள், நகரப் பூங்காக்கள் மற்றும் நகரங்களை அழகுபடுத்தும் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் 133 வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள 23 திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டிலுள்ள அனைத்து நகரங்களின் அபிவிருத்திக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்பு. அதற்கான பணிகளை தற்போது அதிகாரசபை மேற்கொண்டு வருகிறது. நகர அபிவிருத்தியின் மூலம் நாட்டில் பெருமளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நகரங்களை அழகுபடுத்துவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு வளர்ச்சியடைவதோடு நகரங்களை அண்மித்து வாழும் மக்களின் தூய்மையும் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என அமைச்சர் குறிப்பிடுகிறார். எனவே, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து இந்த அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46