ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம் சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (13) காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் வண.அருட்தந்தை ரி.எஸ்.யோசுவா தலைமையில் இடம்பெற்றது .
இந்த நிகழ்வில் வாழ்த்துரையை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளாரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த சத்திமூர்த்தியும் வரவேற்புரையை ஆசிரியர் ப. தயாளனும், நூல் அறிமுக உரையை கவிஞர் கருணாகரனும் ஆற்றினார்கள்.
தொடர்ந்து நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது நூலினை நூலாசிரியரின் பெற்றோர்கள் வெளியிட்டு வைக்க சமூக சேவையாளரும், தொழிலதிபதிருமான ந.சிவகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட நூல் ஆய்வுரைகள் என்பன இடம்பெற்றன.
இதனையடுத்து யாழ் பல்கலைகழக கலை பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் , அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நூல் ஆய்வுரையினை வழங்கினார்கள். நிறைவாக நூலாசிரியர் மு. தமிழ்ச்செல்வனின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுப்பெற்றது.
இந்த நிகழ்வில் சூழலியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பொது மக்கள் என பெருமளவானவர்கள் கலந்கொண்டமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM