(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்கு நேரெதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே மக்களின் ஆதரவுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் வெற்றிகரமாக முன்னெடுப்கப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்காலத் திட்டம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இதனைத் தெரவித்தார்.