கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் : முகாமைத்துவத்தை மாற்றியமைக்க அவதானம் - நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர்

14 Jan, 2024 | 12:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மோதல் தொடர்பில் விரிவாக அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், கந்தக்காடு முகாமைத்துவத்தை மாற்றியமைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையில் கைதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெறும் மோதல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.கைதுகள் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதல்கள் குறித்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தி;ன் முகாமைத்துவத்தை மாற்றியமைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள புனர்வாழ்வு மத்திய நிலையங்களை கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும். அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துக்கு நேரில் சென்று பார்வையிட தீர்மானித்துள்ளேன் என்றார்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து 140 இற்கும் அதிகமான கைதிகள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றனர். பின்னர் பாதுகாப்பு தரப்பினரிடம் அவர்களே ஆஜராகினர்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய கைதிகள் தம்மை துன்புறுத்துவதால் பாதுகாப்பு கருதி புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் செல்வதாக கைதிகள் குறிப்பிடுகின்றமை அவதானத்துக்குரியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும்...

2024-07-15 17:55:06
news-image

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு -...

2024-07-15 21:05:05
news-image

நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி...

2024-07-15 20:59:03
news-image

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு...

2024-07-15 20:40:53
news-image

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தினால்...

2024-07-15 17:54:13
news-image

இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தாராதேவி சிலை...

2024-07-15 17:46:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது

2024-07-15 20:45:10
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில்...

2024-07-15 20:47:44
news-image

இங்கிரியவில் கெப் வாகனம் மோதி பாதசாரி...

2024-07-15 18:23:15
news-image

மின்கட்டண குறைப்பு - முழுமையான விபரங்கள்...

2024-07-15 20:32:40
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-07-15 18:22:04
news-image

கொள்ளுப்பிட்டியில் விபத்து ; புதுமண தம்பதிகள்...

2024-07-15 18:15:13