ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய கூட்டணியின் வேட்பாளராக ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடவுள்ளார் என சண்டேடைம்ஸ்தெரிவித்துள்ளது
இது தொடர்பில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஜனாதிபதி எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் உரையாடுவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டுமுக்கிய கூட்டங்கள் ஜனாதிபதிசெயலகத்தில் இடம்பெற்றன.
ஐக்கியதேசிய கட்சியின் தற்போதைய சிரேஸ்ட தலைவர்கள் இவ்வாறான கூட்டமொன்றை கூட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
இரண்டு விடயங்கள் குறித்துகாணப்படும்தவறான கருத்துக்களை போக்கவேண்டியதன் அவசியத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்ற ஊகங்கள் ,இரண்டாவது ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக சர்வஜனவாக்கெடுப்பை நடத்தும் திட்டம் குறித்த தகவல்கள்.ஜேஆர் ஜெயவர்த்தனவைபோன்று தற்போதைய ஜனாதிபதி சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவுள்ளார் என ஊகங்கள்வெளியாகியுள்ளன.
ஜேஆர்ஜெயவர்த்தன 1983 இல் நாடாளுமன்றதேர்தலை இரத்துசெய்வதற்கான சர்வஜனவாக்கெடுப்பை நடத்தி 1977 நாடாளுமன்றம் 1989வரை தொடர்வதற்கு வழியேற்படுத்தியிருந்தார்.
தற்போதைய ஜனாதிபதியும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாவதற்கு எதிர்கட்சிகளே காரணம் என ஐக்கியதேசிய கட்சி கருதுகின்றது.
முதலாவது சந்திப்பிற்கு ஜனாதிபதி தலைமைதாங்கினார் மூடிய கதவுகளிற்குள் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தேர்தலைஎவ்வாறு முன்னெடுப்பது என ஆராயப்பட்டது. இந்த சந்திப்பில் 8 உறுப்பினர்களை கொண்ட குழு நியமிக்கப்பட்டு அவர்களிற்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இந்த எட்டுப்பேரையும் தலைமைப்பீடம் என வர்ணித்துள்ளார்.
முதலாவது சந்திப்பு இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் மற்றுமொரு சந்திப்பு இடம்பெற்றது.ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கியதேசிய கட்சியின் 16 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முதலாவது சந்திப்பில் கலந்துகொண்டவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இரண்டாவது கூட்டம் முகாமைத்துவ குழு என அழைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடவேண்டும்என கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய பலர் ஜனாதிபதியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்த பின்னரே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை ஐக்கியதேசிய கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் ஏனைய கட்சிகளை உள்ளடக்கிய பாரிய கூட்டணியின் வேட்பாளராக ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்.
இதன் காரணமாகவே ஐக்கியதேசிய கட்சியின் சிலர் அவரை தேசிய வேட்பாளர் என வர்ணித்துள்ளனர் - தேர்தல் பிரச்சாரத்தின் கருப்பொருளாக இது காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM