சூரிய ஒளியைக் கொண்டு ஜல்லிக்கட்டு ஓவியம்..!

13 Jan, 2024 | 09:38 PM
image

இந்தியாவின் கோவையைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் ஒருவர் ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கும் விதமாக பூதக் கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிக்கட்டு ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

தமிழகத்தின் கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யூ.எம்.டி.ராஜா. தங்க நகை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வரும் இவர் அரிசி, மாங்கனி, முட்டை ஓடு, சோப்பு, மெழுகு உள்ளிட்டவையில் வித்தியாசமான முறையில் படங்கள் வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விமர்சையாக  நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் அவர், பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிக்கட்டு ஓவியம் வரைந்துள்ளார். இதில் ஜல்லிக்கட்டு காளையும், மாடுபிடி வீரரும் இடம்பெற்றுள்ளனர். இதற்காக 7 மணி நேரம் எடுத்து கொண்ட ராஜா, “தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் உலகுக்கு பறைசாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10
news-image

ஒரே இடத்தில் மூன்று இயற்கை அற்புதங்கள்!...

2025-05-19 17:24:17
news-image

‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த...

2025-05-16 16:58:29
news-image

`நாடாகவே' அங்கீகரிக்கப்படாத நாடுகள்

2025-05-16 13:34:10
news-image

தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்க்க முடியுமா?

2025-05-13 10:42:50