லக்னாதிபதி வலிமை பெறுவதற்காக வழிபட வேண்டிய ஆலயங்கள்

13 Jan, 2024 | 05:16 PM
image

வாழ்க்கையில் மாற்றமும், முன்னேற்றமும் வேண்டும் என்றால்.. அதற்கான முதல் முயற்சியை நாம் தான் தொடங்க வேண்டும். 'மாற்றம் என்பது மாறாதது', இதனை உறுதியாக மனதில் கொண்டு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், மாற்றங்களை நோக்கி பயணிக்கவும் நாம் நம்மை மனதளவிலும், உடலளவிலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

நாம் வளர்ச்சி அடைய வேண்டும்.. எம்முடைய குடும்பம் மேன்மை அடைய வேண்டும் என்றால்.. அதற்கான தொடக்க அடியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும். நாம் என்று சொன்னவுடன் நம்முடைய லக்னத்தையும், லக்னாதிபதியையும் தான் குறிக்கிறது. ஏனெனில் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி என்னவாக இருக்கிறதோ அது தொடர்பான சொல், செயல் தான் அவர்களிடத்தில் இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் மகர லக்னமாகவோ.. கும்ப லக்னமாகவோ.. இருந்தால், இந்த லக்னத்திற்கு அதிபதியான சனி பகவான் நிதானமிக்கவர். பொறுமைசாலி. அதனால் அவருடைய எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் .. நிதானமும், கொடுமையும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.

அதே தருணத்தில் நாம் முன்னேற வேண்டும் என்றால் நம்முடைய ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்றிருக்க வேண்டும்.‌ லக்னாதிபதி வலு குறைந்திருந்தால் வளர்ச்சி என்பது மிக குறைவானதாகவே இருக்கும். இதனால் நம் ஜாதகத்தை ஜோதிட நிபுணர்களிடம் காட்டினால்.. வேறு எந்த பரிகாரங்களையும் செய்வதற்கு முன்னால், உங்களுடைய லக்னாதிபதியை வலுப்படுத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்துவர். ஏனெனில் லக்னாதிபதி வலிமையாக இருந்தால் மட்டுமே.. உங்களுடைய எண்ணம், நடவடிக்கை ஆகியவை உங்களை வளர்ச்சிக்கான பாதையில் அழைத்துச் செல்லும்.  இந்நிலையில் 'எண்ணம் தான் நம் வாழ்க்கை' என்ற மேற்கோளையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்நிலையில் லக்னாதிபதி வலுவாக இருந்தாலும், லக்னாதிபதி வலு குறைந்திருந்தாலும், லக்னத்திற்கும்.. லக்னாதிபதிக்கும்.. என்று எம்முடைய முன்னோர்கள் சில ஆலயங்களை பிரத்யேகமாக வழிபட வேண்டும் என முன்மொழிந்திருக்கிறார்கள்.  இந்த ஆலயங்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்தாலும், நாம் தமிழகத்திற்கு விஜயம் செய்யும் போது தரிசிக்க வேண்டும். தமிழகத்திற்கு சென்று வர பொருளாதார நிலையில் சக்தி அற்றவர்கள்.. எம்முடைய உறவினர்கள் யாரேனும் அங்கு சென்று தாயகம் திரும்பும் போது, குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று உங்களது பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் அந்த ஆலயத்தில் இருக்கும் இறைவனின் புகைப்படத்தை உங்களது பூஜை அறையில் இடம் பெற வைத்து மானசீகமாக தொழலாம் அல்லது தற்போது இணையதள வசதி கிடைப்பதால் குறிப்பிட்ட ஆலயம் தொடர்பான காணொளிகளை நாளாந்தம் கண்டு தரிசிக்கலாம். 

தற்போது 12 லக்னத்திற்கும் உரிய பிரத்யேக ஆலயங்களின் பட்டியலை காணலாம். இந்த குறிப்பிட்ட ஆலயங்கள் அந்த லக்னத்தின் அதிபதியை மட்டும் குறிப்பிடாமல், அந்த அதிபதிக்குரிய அதி தேவதையையும் கணக்கில் கொண்டு பட்டியலிடப்பட்டிருப்பதால்.. இந்த ஆலயத்திற்கு சென்று திரும்பும் போதெல்லாம் உங்களது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவது உறுதி.

லக்னங்கள்

மேஷம்- பழனி மலை முருகன் கோவில்

ரிஷபம் - ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்

மிதுனம் - திருப்பதி ஏழுமலையான்

கடகம் - திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம்

சிம்மம் - திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம்

கன்னி - குருவாயூர் கிருஷ்ணன் ஆலயம்

துலாம் - திருவெள்ளறை பெருமாள் ஆலயம்

விருச்சிகம் - வைத்தீஸ்வரன் கோவில் ஆலயம்

தனுசு - பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் திருச்சி

மகரம் - குச்சனூர் சனி பகவான் ஆலயம்

கும்பம் - காளஹஸ்தி சிவாலயம்

மீனம் - திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயம்

இந்த ஆலயத்திற்கு எந்த கிழமைகளில் செல்ல வேண்டும் எந்த நட்சத்திரத்தில் செல்ல வேண்டும் எப்போது செல்ல வேண்டும் என்ற நுட்பமான தகவல்களை எல்லாம் உங்களுடைய குடும்ப ஜோதிடரிடம் விவாதித்து அறிந்துகொண்டு சென்றால் பலன்கள் கிடைப்பது உறுதி.

தகவல் வெங்கடேஷ்

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37
news-image

பாவங்கள் நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2025-01-22 17:24:15
news-image

உங்களுக்கு கூர்ம யோகம் இருக்கிறதா..!?

2025-01-21 15:49:42
news-image

அபிஷேகம் செய்வதன் மூலம் பலன் பெறுவது...

2025-01-20 17:52:05
news-image

கடன் சுமை குறைவதற்கான எளிய பரிகாரம்...!?

2025-01-18 22:11:20
news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17