இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 119 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட  தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 42.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் லிவிங்ஸ்டன் 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சிறிவர்தன 40 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

218 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 28.4 பந்து ஓவர்களில் 201 ஓட்டங்களை பெற்றிருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டு, டக்வர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா 70 ஓட்டங்களையும், குணதிலக சதம் கடந்து 88 பந்துகளுக்கு 121 ஓட்டங்களை விளாசினார். குணதிலக 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 12 நான்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.