சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ரகு தாத்தா'. இதில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ஜெயக்குமார், ராஜீவ் ரவீந்திரநாதன், ஜானகி, ஆதிரா பாண்டியலக்ஷ்மி, ராஜேஷ் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யஞ்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். மொழி திணிப்பு மற்றும் மொழி உணர்வு குறித்து நகைச்சுவையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.
இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் கதையின் நாயகியாக கயல்விழி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழி தெரியாதவராகவும், அவர் மீது வேறு மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படும் போது அவரின் எதிர்வினை குறித்த காட்சிகளும் நகைச்சுவையாக இடம் பிடித்திருக்கிறது. இதனால் இந்த குறு முன்னோட்டம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM