சுவிற்சர்லாந்து விஜயத்தை நிறைவு செய்துகொண்டு உகண்டாவுக்கு விஜயம் செய்கிறார் ஜனாதிபதி

13 Jan, 2024 | 01:25 PM
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று சனிக்கிழமை (13) அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, சுவிட்சர்லாந்து – ஆசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமை பேச்சு ஒன்றியத்தின் கூட்டத்தில் ‘எரிசக்தி வளத்தை உறுதி செய்யும் இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்னும் தலைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்த உள்ளார்.

அதனையடுத்து இந்த விஜயத்தின் போது பல்வேறு பிரமுகர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதேநேரம், சுவிட்சர்லாந்து விஜயத்தை நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி எதிர்வரும் 18ஆம் திகதி உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அவர் அங்கு செல்லவுள்ளதோடு பல்வேறு நாடுகளில் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

குறித்த மாநாட்டினை நிறைவு செய்துகொண்டு அவர் எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் வகையில்...

2024-07-16 02:52:10
news-image

கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரித்துரிமை...

2024-07-16 02:46:11
news-image

தேசிய இனப்பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வை முன்வைப்பதற்கு...

2024-07-16 02:37:44
news-image

நாட்டுக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும்...

2024-07-15 17:55:06
news-image

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு -...

2024-07-15 21:05:05
news-image

நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி...

2024-07-15 20:59:03
news-image

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு...

2024-07-15 20:40:53
news-image

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தினால்...

2024-07-15 17:54:13
news-image

இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தாராதேவி சிலை...

2024-07-15 17:46:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது

2024-07-15 20:45:10
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில்...

2024-07-15 20:47:44
news-image

இங்கிரியவில் கெப் வாகனம் மோதி பாதசாரி...

2024-07-15 18:23:15