பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய அரையிறுப்போட்டி நிறைவடைந்த பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களை கண் கலங்க வைத்தது.
இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணிக்காக விளையாடிய வஹாப் ரியாஷ் சிறப்பாக பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய போது வஹாப் ரியாஷ் கண்ணீர்விட்டு அழுதார்.
பாகிஸ்தான் சுப்பர் லீக் ஆரம்பிக்க இருந்த சில நாட்களுக்கு முன்னர் வஹாப் ரியாஷின் தந்தை இறந்துவிட்டார்.
அவர் இறப்பதற்கு முன்னர் வஹாப் ரியாஷிடம் “ பாகிஸ்தான் சுப்பர் லீக் இறுதிப்போட்டியில் நீ லாஹுர் மைதானத்தில், நமது மக்களுக்கு முன் விளையாடுவதை பார்க்க வேண்டும். அது என் கனவு” என தெரிவித்துள்ள நிலையில், பின்னர் அவர் உயிரழந்துள்ளார்.
இந்நிலையில் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தாலும், தனது தந்தை இல்லையே என்ற ஏக்கம் அவரது கண்களில் கண்ணீராக பொழிந்தது.
அதுமாத்திரமின்றி அவர் தந்தை இறந்த பிறகு ஹோட்டலில் இருந்து தொலைபேசியில் அவரின் தாயிடம் தொடர்புக்கொண்டு பேசிய போது அவரது தாய் “ நீ லாஹுரில் விளையாடுவதை பார்ப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. எனினும் உனக்கு கிடைத்த வெற்றியை நினைத்து அவர் எங்கிருந்தாலும் சந்தோஷப்படுவார் ” என கூறியதாக வஹாப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சக வீரர்கள் அவரை சமாதனப்படுத்தியமையை காணொளியில் பார்க்கமுடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM