இலங்கை அரசாங்கம் ஒடுக்குமுறைஜனநாயக விரோத சட்டமூலங்களை விலக்கிக்கொள்ளவேண்டும்என உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சட்டமூலங்களின் சட்டபூர்வதன்மைகுறித்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கேள்விஎழுப்பியுள்ளது.
பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கத்திற்கு சட்டபூர்வதன்மைஇல்லை என தெரிவித்துள்ள இலங்கையின் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் இதன் காரணமாக இரண்டு சட்டமூலங்களையும் அரசாங்கம் விலக்கிக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த விவாதத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் இரண்டு முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஒடுக்குமுறைசட்ட மூலங்கள் நாட்டின் ஜனநாயகத்தின் மீதான பெரும் தாக்குதலாக அமையும் எனவும் சம்பத்தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தின் ஊடாக பேச்சுசுதந்திரத்தை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்கவே கடுமையாக விமர்சித்துள்ளது இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்த பின்னர் வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கையிலிருந்து வெளியேற தீர்மானித்தால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM