இணையவழியில் கடன் வழங்கி அச்சுறுத்தும் கும்பல் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

12 Jan, 2024 | 10:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வெளிநாடுகளை சேர்ந்த மோசடியான வர்த்தகர்கள் இலங்கையில் ஒன்லைன் ஊடாக கடன் வழங்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். கடனை உரிய காலத்தில் செலுத்த முடியாமல் போனால் அவர்களை அச்சுறுத்திவரும் இந்த கும்பல் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

எமது நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில் வெளிநாடுகளை சேர்ந்த மோசடியான வர்த்தகர்கள் இலங்கையில் ஒன்லைன் ஊடான கடன் வழங்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். அவர்களின் பணத்தை பயன்படுத்தியே இந்த கடன் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். 

இதனால் சட்ட ரீதியான பிரச்சினைகள் உள்ளன. இவர்கள் கடனை வழங்கி பெறுமளவில் வட்டியை அறவிடுகின்றனர். பிணையாள் கையெழுத்து, சொத்து பிணை எதுவுமின்றியே அவர்கள் கடனை வழங்குகின்றனர். கடன் பெறுபவர்களின் புகைப்படங்கள், குடும்பத்தினரின் புகைப்படங்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர் ஏதேனும் காரணத்தினால் கடனை மீளச் செலுத்தாவிட்டால் பேஸ்புக் ஊடாக கடன் பெற்றவர்களை அச்சுறுத்துவதுடன், அவர்கள் தொடர்பில் சேறுபூசும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். அதேவேளை கடன் பெற்றவர்கள் கள்ளத் தொடர்புகளை வைத்திருப்பதாக கூறி குடும்பத்தினரை பிரிக்கவும் நடவடிக்கை எடுகின்றனர்.

மாடி வீடுகளில் இருந்துகொண்டு அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரிடம் கேட்டேன்.

அதன்போது சட்டத்தில் சில குறைபாடுகன் இருப்பதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய அடுத்து வரும் பாராளுமன்ற அமர்வில் நிதி விடயம் தொடர்பான சட்டமூலமொன்று வரும் என்றும் அதன்போது இதனை செய்ய முடியாமல் போகும் என்றும் தெரிவித்தார்.

வங்குரோத்தடைந்த நாட்டில் மக்களிடம் பணமில்லை. அவர்களிடம் பணம் இருக்கின்றது. இதன்படி வட்டியின்றி கடன் வழங்குவதாக கூறிக்கொண்டு அதனை செய்யாது 300 வீத வட்டியை அறவிடுகின்றனர். அதனை மீளச் செலுத்த தாமதமானால் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். இவர்கள் வீசாவிலேயே வருகின்றனர். இவர்கள் வணிக வீசாவில் வந்துள்ளனரா? என்று ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இந்த விடயத்தில் அரசாங்கத்தில் யாருக்கும் எதிராக விரல் நீட்ட முற்படவில்லை. அதனால்  இது தொடர்பில் உடனடியாக தலையிட்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன். அதேநேரம்  இவ்வாறான மோசடியாளர்களிடம் கடன் பெற்றிருந்தால் அவற்றை மீள வழங்க வேண்டாம் என்றும் கோருகின்றேன் என்றார்.

அதற்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதிலளிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். கடந்த செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள இலங்கை  நுண் நிதி மற்றும் கடன் கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

நுண் கடன் வழங்கும் புதிய செயற்பாடுகள் நடக்கின்றன. இதில் வெளிநாட்டவர்களே இருக்கின்றனர். இவர்கள் வெளிநாட்டில் ஏதாவது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு இங்கு வந்து தற்காலிக அடிப்படையிலேயே தங்கியிருந்து இவ்வாறாக கடன் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். 

இது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நுண் நிதி மற்றும் கடன் கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்டமூலம் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியாவிட்டாலும் புதிய சட்டங்களை கொண்டுவர  விரையில் நடவடிக்கை எடுப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசுக்...

2024-10-12 18:21:05
news-image

கிரியுல்ல - மீரிகம வீதியில் விபத்து;...

2024-10-12 18:20:35
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்...

2024-10-12 18:33:39
news-image

ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே...

2024-10-12 18:07:05
news-image

அத்தனகலு ஓயா, உறுவல் ஓயாவைச் சூழவுள்ள...

2024-10-12 17:20:26
news-image

மன்னார் குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம்...

2024-10-12 16:56:16
news-image

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை,...

2024-10-12 16:52:49
news-image

மட்டு. போதனா வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை...

2024-10-12 17:09:25
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது!

2024-10-12 16:41:57
news-image

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு...

2024-10-12 16:41:28
news-image

கொலை, கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை...

2024-10-12 15:54:02
news-image

யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில்...

2024-10-12 15:55:09