மட்டக்களப்பில்   12  ஆவது நாளாக தொடரும்   வேலையற்ற  பட் டதாரிகளின்  போராட்டமானது  தற்போது மனித  சங்கிலி  போராட்டமாக மாறியுள்ளது .

இன்றய தினம்  இலங்கை தமிழ் ஆசிரியர்  சங்கத்தினர்  தங்களத்து  ஆதரவை தெரிவித்ததை அடுத்து  இந்த மனித சங்கிலி  போராட்டத்தையும்  முன்னெடுத்துள்ளனர் .

சில தினங்களுக்கு  முன்  அரசாங்க அதிபரை  சந்திக்க  சென்ற போது  பட் டதாரிகள் ஏமாற்றமடைந்ததையடுத்து  சில அசம்பாவித  சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. 

இதைத்தொடர்ந்து  பட்டதாரிகளின் இந்த  போராட்டத்துக்கு  பலத்த  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போலிஸாரும் பெருமளவு  குவிக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது.