ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெண்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக செல்வதை தடை செய்யும் முகமாக புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதற்கு முன்னர் சட்டத்தில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதே தடை செய்யப்பட்டிருந்தது.
மேலும் , வெளிநாட்டிற்கு வேலை நிமித்தம் செல்லும் பெண்ணிகளின் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுகின்றனர்.
இதன்படி 7 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு பெற்றோர் பராமரிப்பின்றி பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அவர்களின் அசௌகரியத்தின் நிமித்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக காணொளிகள் மூலம் விசாரணகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM