திருகோணமலை - புல்மோட்டை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு என்பவற்றை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.