எம்மில் பலருக்கும் செய்த பாவங்கள் மற்றும் தெரியாமல் செய்த பாவங்களுக்கும் நாம் வாங்கி வந்த அல்லது நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் கர்மாவிற்கும் வேறுபாடு தெரியாமல் இருக்கிறார்கள். கர்மாவை அதற்குரிய காலகட்டத்தில் தான் முறையான வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய ஆலயங்களுக்குச் சென்று பரிகாரம் செய்து அதிலிருந்து மீள வேண்டும்.
ஆனால் பாவங்கள் என்பது வேறு. நாம் வாழும் வாழ்க்கை நடைமுறையில் நாம் தெரிந்து பல தவறுகள் செய்கிறோம். நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய தவறுகள் கூட நம்முடைய பாவ கணக்கில் எழுதப்படுகிறது. தெரியாமல் செய்யும் தவறுகள் கூட நம்முடைய பாவ கணக்கில் எழுதப்படுகிறது.
உடனே எம்மில் பலரும் எமக்குத் தெரியாமல் செய்யும் தவறுகள் கூட ஏன் பாவ கணக்கில் எழுதப்படுகிறது? என்பர். ஒரு உதாரணத்திற்கு நீங்கள் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எதிரே கணவன் மனைவி போல தோன்றும் இருவர் அல்லது உங்களுக்கு அறிமுகமான தம்பதிகள் நடந்து வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அவர்களை வலது பக்கமாகவோ அல்லது இடது பக்கமாகவோ கடந்து சென்றால் தவறு இல்லை. ஆனால் நீங்கள் அவர்களுக்கு அந்த தம்பதிகளுக்கு இடையே புகுந்து சென்றால் நீங்கள் தெரியாமல் சென்றாலும் கூட அது பாவம்தான் என்கிறது எம்முடைய புராணங்கள்.
இதுபோல் தெரியாமல் செய்யும் பாவங்கள் ஏராளமாக உள்ளன. அதனால் தெரிந்து செய்யும் பாவங்களுக்கு ஒரு காலகட்டத்தில் அதற்காக நாம் நிஜமாகவே மனம் வருந்துவோம். அந்த காலகட்டத்தில் நம் பாவங்களை களைவதற்காக எம்முடைய முன்னோர்கள் ஒரு ஆலயத்தை இதற்கு பரிகாரமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
அந்த ஆலயம் தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரில் உள்ள சித்திர குப்தர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு உங்களுடைய பூர்வ புண்ணிய பலத்தை வழங்கும் நட்சத்திர தினத்தன்றோ அல்லது தெய்வ அனுகூலத்தை வழங்கும் உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்திலிருந்து ஆறாவது நட்சத்திர தினத்தன்றோ சென்று வழிபட வேண்டும். இந்த ஜோதிட விவரங்கள் தெரியவில்லை என்றால் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆலயத்திற்குச் சென்று தரிசிக்கலாம்.
இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடும்போது உளுந்து வடை அல்லது உளுத்தம் பருப்பினால் செய்யப்பட்ட நைவேத்தியத்தை வைத்து படைத்து அதனை பிரசாதமாக அங்குள்ள மக்களுக்கு வழங்க வேண்டும். அதன் போது தெரிந்தும் தெரியாமல் செய்த பாவத்தை களைய வேண்டும் என ஒரு முகத்துடன் பிரார்த்தனை செய்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கும்.
அதனால் நாம் இந்த ஜென்மத்தில் தெரிந்தும்.. தெரியாமலும் செய்த பாவங்களை நீங்குவதற்கு ஆண்டிற்கு ஒரு முறை காஞ்சிபுரம் சென்று சித்திரகுப்தரை தரிசிக்க வேண்டும். நாம் ஜனிக்கும்போது வரமாக பெற்றுக் கொண்டு வரும் கர்மாவை கழிப்பதற்கு ஆண்டிற்கு ஒரு முறை இராமேஸ்வரம் அல்லது திருச்செந்தூருக்கு வருகை தந்து முறையான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து செய்யும்போது எம்முடைய முன்னேற்றத்தில் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து வளர்ச்சி காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM