சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு

Published By: Vishnu

11 Jan, 2024 | 09:06 PM
image

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே வியாழக்கிழமை (11) எடுத்து கொள்ளப்பட்டது. 

வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதிவழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது வியாழக்கிழமை (11) B688/2002 நீதிமன்றத்திலே எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின் போது முல்லைத்தீவு பொலிஸார் தாங்கள் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தனர். 

வியாழக்கிழமை (11) சந்தேகநபர்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் உட்பட ஐந்து நபர்களாக இணைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சார்பிலே முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சார்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகி நாங்கள் விண்ணப்பம் செய்திருந்தோம். 

குறித்த வழக்கானது பிழையாக தாக்கல் செய்யப்பட்ட அமைதி வழியிலே போராடிய அரசியல் வாதிகள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கென மன்றிற்கு தெரிவித்திருந்தோம்.

மேலும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரையில் இவ்வழக்கினை கிடப்பில் போடவேண்டும் எனவும் மேலதிகமாக இந்த வழக்கினை தொடர வேண்டும் என சந்தர்ப்பம் ஏற்பட்டால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு மீண்டும் இந்த வழக்கானது நீதிமன்றிலே கொண்ட செல்லப்பட முடியும் எனவும் விண்ணப்பம் செய்திருந்தோம். அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் அவர்கள் குறித்த வழக்கினை இன்றையதினத்திலிருந்து கிடப்பில் போட்டுள்ளார். மீளவும் அறிவித்தல் கிடைத்தால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்கள் வழக்கிற்கு வருகை தர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

குறித்த வழக்கிற்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் ஆகியோர் தோன்றியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52
news-image

இன்றைய வானிலை

2025-04-26 06:12:09