பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சங்காவின் மறுமுகம் : அதிர்ச்சிக்குள்ளான சகவீரர்கள் (காணொளி இணைப்பு)

By Presath

04 Mar, 2017 | 11:09 AM
image

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியில் நேற்றைய போட்டியில் கராச்சி மற்றும் பேஸ்வர் அணிகள் மோதின.

இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் குவேட்டா கிலேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் கராச்சி அணியின் தலைவரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான குமார் சங்கக்காரவின் செயற்பாடுகள் ரசிகர்களுக்கு புதுமையளித்தது.

நேற்றைய போட்டியில் பேஸ்வர் சல்மி அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் போது 10 ஓவர் நிறைவில்  சிறிய இடைவேளை வழங்கப்பட்டது.

கராச்சி பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கட்டையும் சரிக்க முடியாததோடு ஓட்டங்களை வாரி வழங்கிக்கொண்டிருந்தனர்.

அதுமாத்திரமின்றி களத்தடுப்பிலும் மோசமாக செயற்பட்டனர்.

இதனை அவாதனித்த சங்கக்கார இடைவேளையின் போது தனது அணி வீரர்களுக்கு கடுமையான முறையில் ஆலோசனை வழங்கும் காணொளி சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

போட்டிகளில் மிகவும்  அமைதியாகவும், வீரர்களுடன் சகஜமாக நடந்துக்கொள்ளும் சங்கக்காரவின் குறித்த செயற்பாட்டை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளனர்.

குமார் சங்கக்கார ஆலோசனைகள் வழங்கும் போது சக வீரர்களின் முகம் வாடிப்போய்விட்டது. அந்தளவிற்கு கடுமையாக பேசும் குமார் சங்கக்காரவை கிரிக்கெட் உலகம் நேற்றுதான் பார்த்திருக்கிறது. அணி போட்டியில் வழுவிழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத சங்கக்கார கொந்தளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் போட்டியின் நிறைவில் சங்கக்கார கருத்து தெரிவிக்கையில், “இவ்வாறு வீரர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டது போட்டியின் சூழ்நிலைதான். நாம் முக்கியமான ஒரு போட்டியில் விளையாம் போது ஆரம்பத்தில் ஓரிரண்டு விக்கட்டுகளை கைப்பற்றுவது அவசியம். எனினும் பந்துவீச்சாளர்கள் விக்கட்டுகளை கைப்பற்றவில்லை. ஓட்டங்கள் சடுதியாக உயர்வடைந்திருந்தது. இதனால் இவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டியாயிற்று. இவை அனைத்துமே போட்டிக்காக மட்டும்தான்” என்றார். 

இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22