பிருத்விராஜ் நடிக்கும் 'ஆடு ஜீவிதம்' படத்தின்ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

11 Jan, 2024 | 09:14 PM
image

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமான மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆடு ஜீவிதம்' ( தி கோட் லைஃப்) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

தேசிய விருது பெற்ற இயக்குநரான பிளெஸ்சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆடு ஜீவிதம்' ( தி கோட் லைஃப்) . இதில் பிருத்விராஜ் சுகுமாறன், அமலாபால், ஜிம்மி ஜிம்-லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப் புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

பாலைவனப் பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் மனிதர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இத்திரைப்படத்தை விசுவல் ரொமான்ஸ் இமேஜ் மேக்கர்ஸ், ஜெட் மீடியா புரொடக்ஷன் மற்றும் அல்டா குளோபல் மீடியா ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் பிருத்விராஜின் வயதான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட்டிற்கு 'டெஸ்ட்'...

2025-03-26 16:48:38
news-image

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்

2025-03-26 16:03:40
news-image

'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திகில் திரைப்பட...

2025-03-26 15:08:17
news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30