சாதனை படைக்கும் அசோக் செல்வனின் 'ப்ளூ ஸ்டார்' திரைப்பட முன்னோட்டம்

11 Jan, 2024 | 04:30 PM
image

நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இதில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், திவ்யா துரைசாமி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

இயக்குநர் எஸ். ஜெயக்குமாருடன் இணைந்து தமிழ் பிரபா திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கும் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொண்டிருக்கிறார்.

வளரிளம் பருவத்தினரின் துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி. சௌந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் வழங்குகிறார்.

இத் திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது.

வட தமிழகத்தில் வாழும் இளம் தலைமுறையினரின் துடுப்பாட்ட விளையாட்டையும்,  அவர்களது வாழ்வியலையும் மையப்படுத்திய காட்சிகள் யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08
news-image

இயக்குநர் ராஜு முருகனுடன் இணையும் கௌதம்...

2024-09-14 10:53:20
news-image

சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை'...

2024-09-14 06:46:07
news-image

பாடகர் மனோவின் இரு மகன்களை கைதுசெய்ய...

2024-09-13 12:10:15