எம்மில் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை சிறிய அளவிலோ அல்லது தங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற அளவிலோ அல்லது பெரிய அளவிலோ விற்பனையகம், விற்பனை நிலையம், உற்பத்தி மற்றும் விற்பனை கூடம், தொழிலகம்.. என்பவற்றை ஏற்படுத்திக் கொண்டு தொழிலில் ஈடுபட்டிருப்பார்.
தொழிலில் ஈடுபடுவதற்கு முன் அனைவரும் இறைவழிபாடு, சகுனம், யாகம், வேள்வி, நல்ல நாள், வாஸ்து, பூஜை, தானங்கள் போன்ற தொழில் விருத்திக்கான அனைத்து விடயங்களையும் கவனித்த பிறகே தொழிலை தொடங்கி இருப்பர்.
இந்நிலையில் தொழிலைத் தொடங்கி நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று தொய்வு ஏற்பட்டு.. லாபம் குறைந்து.. பிறகு நஷ்டம் ஏற்பட்டு.. தொழிலை கைவிட வேண்டிய அளவிற்கு சூழல் ஏற்படும்.
இதுபோன்ற நிலைகளில் பலரும் இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்பினாலும்.. அவர்களால் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது. அத்துடன் தொழில் மீது எதிர்நிலையான எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு, சோதிடத்தின் மீதும்.. இறை நம்பிக்கை மீதும்.. குறை கூற தொடங்கி விடுவர்.
ஆனால் எம்முடைய முன்னோர்கள் நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழிலில் நஷ்டம், லாபமின்மை, எதிரிகளால் தொல்லை, திடீரென்று பண வரவு சரிவு.. போன்ற நெருக்கடிகளும், அழுத்தங்களும் ஏற்பட்டால்.. இதிலிருந்து மீள்வதற்கான பரிகார வழிபாட்டு ஆலயங்களையும் முன்மொழிந்திருக்கிறார்கள்.
புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம்முடைய மக்கள் ஆண்டுதோறும் தவறாமல் இந்தியாவிற்கு விஜயம் செய்து குறிப்பாக வெளிநாடுகளில் தொழிலில் ஈடுபட்டிருக்கும் எம்முடைய சகோதரர்கள், தமிழகத்திற்கு வருகை தந்து தொழிலில் எந்தவித தடைகளும் ஏற்படாதிருக்க கீழ்க்கண்ட மூன்று ஆலயங்களுக்கு ஒரே நாளில் சென்று தரிசிப்பர்.
அந்த மூன்று ஆலயங்களை தான் நாம் இப்போது காணவிருக்கிறோம். அவை யாவன..
சிங்கிரிகுடி நரசிம்மர் ஆலயம்..
பூவரசங்குப்பம் நரசிம்மர் ஆலயம்..
பரிக்கல் நரசிம்மர் ஆலயம்...
இந்த மூன்று ஆலயங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் அற்புதமான அதிசயமான ஆலயங்கள். தமிழகத்தில் உள்ள வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்குள் இருக்கும் இந்த மூன்று ஆலயத்திற்கும் ஒரே நாளில் சென்று, அங்கு வீற்றிருந்து அருள் பாலிக்கும் நரசிம்ம பெருமாளை தரிசிக்க வேண்டும்.
இதன் போது முதலில் சிங்கிரிகுடி நரசிம்மர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நரசிம்ம பெருமாளை தரிசித்த பிறகு ஒன்பது நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, துளசியை மாலையாக சாற்றி, தொழிலில் இருக்கும் தடைகளை அகற்றி லாபம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என ஒருமுகமான மனதுடன் பிரார்த்திக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து பூவரசங்குப்பம் நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று, அங்குள்ள நரசிம்ம பெருமாளையும் தரிசிக்க வேண்டும். இங்கும் ஒன்பது நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, துளசி மாலையை சாற்றி தொழில் தொடர்பான பிரார்த்தனையை ஒரு முகமாக மேற்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து பரிக்கல் நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று, நரசிம்மரை தரிசிக்க வேண்டும்.
இங்கும் ஒன்பது நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி துளசி மாலையை சாற்றி தொழிலில் இருக்கும் மாயக்கடைகளை அகற்ற பிரார்த்திக்க வேண்டும்.
இதனுடன் இந்த ஆலயத்தை குறிப்பாக நரசிம்மரின் கர்ப்ப கிரகத்தை 21 முறை வலம் வர வேண்டும். இதன் போது உங்களுடைய பிரார்த்தனை தொழில் தொடர்பானதாக மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த மூன்று ஆலயத்தையும் ஒரே நாளில் தரிசனம் செய்து முடித்த பிறகு நீங்கள் மேற்கொண்டிருந்த தொழிலை மீண்டும் தொடங்கினாலோ அல்லது தொடர்ந்தாலோ லாபங்கள் வரத் தொடங்கி.. மகிழ்ச்சி பொங்கும்.
இத்தகைய பிரார்த்தனையை எம்முடைய மண்ணில் உள்ள தொழிலதிபர்களும், புலம்பெயர்ந்து தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களும் ஆண்டுதோறும் தவறாமல் செய்து தங்களின் செல்வ நிலையை வளர்ச்சி அடைய செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக உங்களுக்கும் ஏதேனும் தொழிலில் தொல்லைகள் இருந்தால்.. இந்த மூன்று ஆலயத்திற்கும் ஒரே நாளில் சென்று தரிசித்தால்.. உங்களுடைய வாழ்க்கையிலும் தொழில் துறையில் திருப்பம் ஏற்படும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM