பக்கவாத பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை

11 Jan, 2024 | 08:31 PM
image

எம்முடைய மூளை பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டாலோ அல்லது மூளை பகுதிக்கு ரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் மிகப்பெரிய ரத்த குழாய்களில் பாரிய அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ எமக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படும்.

எம்மில் பலருக்கும் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அதற்குரிய 'கோல்டன் ஹவர்ஸ்' எனும் மதிப்புமிகு நேரத்திற்குள் அருகில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைக்கு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டும். இதன் போது மருத்துவர்கள் பாதிப்பின் தன்மையை உடனடியாக அவதானித்து அதற்குரிய முழுமையான நிவாரண சிகிச்சையை வழங்குவர்.

இதன் போது சிலருக்கு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பக்கவாத பாதிப்பு.. கழுத்து பகுதியிலிருந்து மூளைக்கு இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் மிகப்பெரிய ரத்த குழாய்களில் கொழுப்பு  படிவத்தால் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக ரத்த ஓட்டத்தில் தடை உண்டாகி.. பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருப்பதை துல்லியமாக அவதானித்தால்.. அவர்களுக்கு கரோடிட் எண்டார்டெரெக்டோமி ( Carotid Endarterectomy) எனும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டு பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணம் வழங்குவர்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட வேறு சிலருக்கு கரோட்டிட் ஓஞ்சியோபிளாஸ்டி மற்றும் கரோட்டிட் ஸ்டென்ட்டிங்  ஆகிய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டும்.. இரத்த குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை அகற்றி, ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, பக்கவாத பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர். இதனை மருத்துவ மொழியில் லார்ஜ் வெஸல் அக்கல்ஸன் ( Large Vessel Occlusion) என குறிப்பிடுவர். 

பக்கவாத பாதிப்புக்குள்ளான நோயாளிகளில் இத்தகைய  பாதிப்பினால் பக்கவாதம் ஏற்பட்டிருந்தால்.. அவர்களுக்கு மேற்கூறிய பிரத்யேக நவீன சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.‌

டொக்டர் சுபா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49