எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என பலர் தெரிவிக்கின்றனர் அவர் போட்டியிடுவார் என நான் தெரிவிக்கின்றேன் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சி தற்போது இந்த விடயத்தில் மௌனத்தை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஹரீன்பெர்ணாண்டோ உத்தியோகபூர்வமாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிராமியமட்டத்தில் கட்சி கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி பிளவுபட்டுள்ளதால் ரணில்விக்கிரமசிங்கவிற்கான வெற்றிவாய்ப்பு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பிரச்சாரம் இல்லாததால் எதிர்கட்சி மாத்திரமே இலங்கையில் உள்ளது என தெரிவிப்பது சுலபம் ஆனால் ஆனால் எதிர்கட்சிஇரண்டாக பிளவுபட்டால் ரணில்விக்கிரமசிங்க வெற்றியை நோக்கி செல்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசவும் எதிர்கட்சியின் வாக்குகளை பிளவுபடுத்தும் வாய்ப்புள்ளதால் எங்கள் வேட்பாளா முன்னிலை பெறுவார் எனவும் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM