இலங்­கை­யா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இரண்டு வருட கால அவ­காசம் வழங்கும் வகையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் பிரிட்டன் கொண்­டு­வ­ர­வுள்ள இலங்கை தொடர்­பான பிரே­ரணை எதிர்­வரும் 16 ஆம் திக­திக்கு முன்னர் பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கடந்த  2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில்  அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட  இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையின் நீடிப்­பா­கவே  பிரிட்டன் இம்­முறை கொண்­டு­வ­ர­வுள்ள   பிரே­ரணை அமையும் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

மேலும் கடந்த  2015 ஆம் ஆண்டு  அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட  இலங்கை  தொடர்­பான பிரே­ர­ணையை கடந்த 18 மாதங்­க­ளாக இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு நிறை­வேற்­றி­யது என்­பது தொடர்­பான  அறிக்­கையை  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன்  சமர்ப்­பித்­துள்ளார்.  இந் நிலையில்  பிரிட்­டனின் பிரே­ரணை அதனை அடி­யொட்­டி­ய­தாக அமையும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

குறிப்­பாக  இலங்­கை­யா­னது  நல்­லி­ணக்கம் மற்றும்  பொறுப்­புக்­கூறல்  செயற்­பாட்டில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு   இரண்டு வருட கால அவ­கா­சத்தை  ஐக்­கிய நாடுகள் சபை­யிடம் கோரி­யுள்ள நிலை­யி­லேயே  சர்­வ­தேச சமூ­கமும் இந்த முடி­வுக்கு வந்­துள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மான ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத்  தொடர்  எதிர்­வரும் 24 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.    இந்­த­வ­கையில் இலங்கை தொடர்­பான  செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை  தொடர்­பான விவாதம் எதிர்­வரும் 22 ஆம் திகதி ஜெனி­வாவில் நடை­பெறும்.

கடந்த திங்­கட்­கி­ழமை முதல் நேற்­று­வரை ஜெனி­வாவில் முகா­மிட்­டி­ருந்த  வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர   மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிரதிநிதிகளைச் சந்­தித்து    இலங்­கைக்கு  கால அவ­காசம் வழங்­க­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.  

குறிப்­பாக  அமைச்சர் மங்­கள சம­ர­வீர  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைனை சந்­தித்துப்  பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். 

இதன்­போது  இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் மற்றும்  அதில் காணப்­ப­டு­கின்ற தடைகள்இ முட்­டுக்­கட்­டைகள் என்­பன குறித்து   விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. 

அத்­துடன் அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்ற நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும்  அதன்   முன்­னேற்­றங்கள் தொடர்­பா­கவும் இந்த சந்­திப்பின் போது அமைச்சர் மங்­கள சம­ர­வீர  செயிட் அல்  ஹூசை­னுக்கு எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார்.

குறிப்­பாக  நல்­லி­ணக்க விட­யத்தில் மேலும் முன்­னேற்­றத்தை  வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக  கால அவ­கா­சத்தை வழங்­கு­மாறு  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசை­னிடம்  அமைச்சர் மங்­கள சம­ர­வீர கோரிக்கை விடுத்­த­தா­கவும்  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  மூடிய அறைக்குள்  சுமார்  10 நிமி­டங்கள் இந்த சந்­திப்பு நடை­பெற்­ற­தாக ஜெனிவா தக­வல்கள்  தெரி­வித்­தன.

மேலும்  ஜெனிவா வளா­கத்தில் நடை­பெற்ற விசேட உப­குழுக் கூட்­டங்­க­ளி லும்   அமைச்சர் மங்­கள சம­ர­வீர கலந்­து­கொண்டார்.   இதன்­போது சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­கா­ரத்­துக்கு பதி­ல­ளித்­தி­ருந்த அமைச்சர் மங்­கள சம­ர­வீர சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெற்­றாலும் இடம்­பெ­றா­விட்­டாலும்   நம்­ப­க­ர­மான நீதிப்­பொ­றி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு     பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­படும் என்று அறி­வித்­தி­ருந்தார்.

இது இவ்­வாறு இருக்க  கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்கொண்ட சிறுபான்மை மக்கள் தொடர்பாக  ஆராயும் ஐ.நா.வின் விசேட நிபுணர்  ரீட்டா ஐசாக்  நாடியா  முன்வைத்த  இலங்கை தொடர் பான அறிக்கை  உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அறிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் 15 ஆம்திகதி   ஜெனிவா மனித உரிமைப் பேரவையில்  விவாதம் நடைபெற வுள்ளது.   இதன்போது இலங்கையின் சார் பிலும்  ஜெனிவாவில்  உரை நிகழ்த்தப் படவுள்ளது.