அனலைதீவு விபத்து - அம்பியுலன்ஸ் படகு வர தாமதித்தமையால் இளைஞன் உயிரிழப்பு

Published By: Vishnu

11 Jan, 2024 | 01:45 PM
image

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் புதன்கிழமை (11) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அனலைதீவை சேர்ந்த தர்சன் (வயது 23) எனும் இளைஞன் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். 

படுகாயமடைந்த இளைஞனை கடல் தாண்டி ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்பியுலன்ஸ் படகுக்கு உறவினர்கள் அறிவித்து காத்திருந்த போதிலும் , படகு வர தாமதமாகியது. 

அதனால் கடற்படையினரின் விரைவு படகின் மூலம் இளைஞனை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். 

இளைஞனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

தீவகத்திற்கான வைத்திய வசதிகளை செய்து தருமாறு பல வருடங்களாக தாம் கோரி வருகின்ற போதிலும் தீவகத்திற்கான வைத்திய வசதிகள் செய்து தரப்படவில்லை.

கடல் தாண்டி வேறு வைத்தியசாலைக்கு செல்வதற்கு எந்நேரமும் கடலின் நிலைமை சாதகமாக இருக்கும் என சொல்ல முடியாது. ஆகவே தீவுகளில் உள்ள வைத்தியசாலையை மேம்படுத்தி வைத்திய வசதிகளை செய்து தருமாறு கோரினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 13:18:48
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29
news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23