3 மாதங்களுக்குள் நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய புதிய சமூக பாதுகாப்பு திட்டம் முன்வைக்கப்படும் - மனுஷ

11 Jan, 2024 | 01:39 PM
image

நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றும், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து பொதுவான பாதுகாப்பு அமைப்பு தயாரிக்கப்படும் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 

இலங்கையில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கௌரவம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் வகையில் தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள "கரு சரு" வேலைத்திட்டத்தின் கீழ் நீர் குழாய் பொருத்துனர் மற்றும் வர்ணம் தீட்டுநர்களுடன் நேற்று புதன்கிழமை (10) நடைபெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

அறைக்குள் இருந்து கொண்டு முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக நேரடியாக மக்கள் மத்தியில் சென்று அவர்களின் கருத்துக்கள் விருப்பங்கள் மற்றும் தேவைகளை அறிந்து பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே கருசரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கருசரு வேலை திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலில் முறை கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

எனினும் இவ்வளவு காலமும் முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முறைசாரா தொழிலாளர்களுக்கு உரிய கண்ணியம் கிடைக்காததால் கடந்த 75 ஆண்டுகளாக நாம் அரசியல்வாதிகளை திட்டி வருகின்றோம்.

இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்காகவே இதை நடைமுறைப்படுத்துகின்றோம்.

அத்துடன்  நீர் குழாய் தொழில்நுட்ப வல்லுனர்களை பயன்படுத்துவதற்கான முறை அல்லது தரநிலை எங்களிடம் இல்லை. இத்தகைய தரநிலையை நடைமுறைப்படுத்தாத வரை இந்த தொழில்களுக்கு மதிப்பு இல்லை.

நிறம் தீட்ட வேண்டும் என்றால் யாரையாவது வரவழைத்து தீட்ட வேண்டும். ஆனால் அந்த நபரின் தகுதி என்ன என்பதை அறிய முறையான திட்டம் இல்லை.

நாட்டின் பெறுமதியில் சுமார் 12 லட்சம் ஊதியமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நிறம் தீட்டுபவர்களை வழங்கும்படி வெளிநாட்டிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கான நேர்முகப் பரீட்சை நடத்துவதற்காக நம் நாட்டில் இருந்து வர்ணம் தீட்டுபவர்களை அழைத்தேன்.

வந்தவர்களில் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. அவர்களிடம் அதற்கான முறையான பயிற்சியோ அல்லது தகுதியோ இல்லை. பின்பற்றவேண்டிய ஒழுங்கு முறைகளில் நாம் பின்தங்கி உள்ளோம்.

எனவே சரியான முறையை பின்பற்றினால் எமக்கு உரிய மதிப்பும் கௌரவமும் கிடைக்கும்.

இந்த வேலைத்திட்டம் தொழில் அமைச்சு உட்பட அனைத்து அதிகாரிகளினதும் கூட்டுப் பொறுப்பாகும்.

தொழில் உறவுகள் அமைச்சர் என்ற வகையில் இந்த நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் சமமாக பேண வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. கருசரு வேலைத்திட்டத்தின் கீழ் 20 விடயங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

எவ்வாறாயினும் சகலரினதும் பங்கேற்புடன் சட்டத்தரணிகள் சங்கம், வைத்திய சங்கம், கட்டிடக்கலைஞர் சங்கம் போன்ற சங்கமொன்றை நிறுவ எதிர்பார்த்துள்ளோம்.

இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இது ஒரு தொழிற்சங்கம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அவ்வாறே, இதனுடன் தொடர்புடைய சட்டங்கள் வேலை வாய்ப்பு காப்பீட்டு சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் தொழில் கண்ணியத்திற்கான மேலதிக அத்தியாயமொன்று புதிய சட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளோம். இன்று நீங்கள் அமைக்கும் சங்கம் உங்கள் தரத்தை நிர்ணயிக்கும். அதை பல அரச நிறுவனங்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கட்டுமான பணியின் போது கட்டிடக் கலைஞரின் கையொப்பம் எவ்வாறு அவசியமோ அவ்வாறே மின்னியலாளர்களுக்கான ஒரு திட்டத்தை எங்களால் செயற்படுத்த முடிந்தது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மின்னியலாளர்களின் மதிப்பையும் பெற்று கொடுக்க முடிந்துள்ளது.

இதன் பின்னர் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்று தனியான நிதியங்களோ விவசாய காப்புறுதி உட்பட ஏனைய காப்புறுதி திட்டங்கள் இன்றி நாட்டின் தொழிலாளர்களுக்கான பொதுவான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்த உள்ளது.

இதற்கான பூர்வாங்க வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை மூன்று அல்லது நான்கு மாதங்களில் பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17