முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே புதன்கிழமை (10) அதிகாலை தீ பரவியுள்ளது.
புதன்கிழமை (10) அதிகாலை திடீரென தீ ஏற்ப்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி குறித்த வர்த்தகநிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
இருப்பினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தகநிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் முற்று முழுதாக எரிந்து அழிவடைந்துள்ளது. பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எவ்வாறு குறித்த தீ ஏற்ப்பட்டது என்பது தொடர்பிலான விசாரணைகளையும் மேலதிக விசாரணைகளையும் முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM