வெல்லாவ - லுனுகந்தவெல்ல தெதுறு ஓயாவில் முச்சக்கரவண்டியொன்று விழுந்ததில் இருவரை காணவில்லை.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணமல் போயுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகி தெதுறு ஓயாவில் விழுந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.