நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்து வெளியான 'ஜோ' எனும் திரைப்படம், பட மாளிகைகளில் வெற்றிகரமாக 50வது நாளை நிறைவு செய்ததை தொடர்ந்து படக் குழு வெற்றி விழாவை கொண்டாடியது.
ஏராளமான டிஜிட்டல் தளங்கள் இணைய தலைமுறையினரிடத்தில் பாரிய வரவேற்பை பெற்ற பிறகு.., சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்கள், பட மாளிகையில் வெளியாகி வெற்றி காண்பது என்பது மிக மிக அரிது. இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்து வெளியான 'ஜோ' எனும் திரைப்படம், படமாளிகையில் வெளியாகி வெற்றிகரமாக ஐம்பதாவது நாளை நிறைவு செய்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் பட குழுவினர் சென்னையில் வெற்றி விழாவை நடத்தினர். இதில் 'ஜோ' திரைப்படத்தின் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,'' இந்த திரைப்படத்தின் மீது தயாரிப்பாளர் அருளானந்து அதீத நம்பிக்கை வைத்திருந்தார். பட மாளிகையில் வெளியாகும் முன்னரே இத்திரைப்படத்திற்கு பிரபல டிஜிட்டல் தளம் ஒன்று இப்படத்தை ஓ டி டி யில் வெளியிடுவதற்கான வர்த்தக பேச்சு வார்த்தையை தொடங்கியது. ஆனால் தயாரிப்பாளர் இத்திரைப்படம் பட மாளிகையில் வெளியாகி ரசிகர்களிடம் பேராதரவு கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார். அதனால் டிஜிட்டல் தள வர்த்தகத்தை ஏற்க மறுத்தார்.
இந்த காலகட்டத்தில் 'ஜோ' எனும் படைப்பின் மீது தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கை எம்மை வியப்பில் ஆழ்த்தியது. இந்தத் திரைப்படம் வெளியான பிறகு ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வாய்மொழி பரப்புரையால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், வெற்றிகரமாக ஏழு வாரத்தைக் கடந்து 50-வது நாளை நிறைவு செய்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவிற்கும், இந்தப் படத்தின் மீது தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கைக்கும், தரமான திரைப்படத்தை கொடுத்தால் ரசிகர்கள் வெற்றி பெற செய்பவர்கள் என்று நம்பி கடுமையாக உழைத்த இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட படக் குழுவினருக்கும் எம்முடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM