இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா எனும் பாதிப்பிற்குரிய நவீன மருந்தியல் சிகிச்சை

10 Jan, 2024 | 04:52 PM
image

எம்மில் சிலருக்கு இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் காரணமாக ரத்தக் கசிவு ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் இம்யுன் த்ரோம்போசைட்டோபீனியா என குறிப்பிடுவர். ரத்த தட்டணுக்களின் உற்பத்தி மற்றும் செயல் திறனில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாக உருவாகும் இத்தய பாதிப்பிற்கு தற்போது நவீன மருந்துகள் மூலமாக முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காலையில் எழுந்த பிறகு பல் தேய்க்கும் போது ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவது, மூக்கிலிருந்து தானாக ரத்தக் கசிவு ஏற்படுவது, தோலில் சிறிய சிறிய புள்ளிகளாக உருவாகி அதனூடாக ரத்தக் கசிவு ஏற்படுவது, சிறுநீர் மற்றும் மலம் வெளியேறும்போது ரத்தத்துடன் வெளியேறுவது, சில பெண்களுக்கு மாதவிடாயின் போது இயல்பான அளவை விட கூடுதலாக ரத்தப்போக்கு இருப்பது.. இவையெல்லாம் இத்தகைய பாதிப்பின் அறிகுறிகளாகும்.

பிரத்யேக விற்றமின் சத்து குறைபாட்டின் காரணமாகவும், டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். வெகு சிலருக்கு அரிதாக ரத்த புற்று நோய் காரணமாகவும் இத்தகைய இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை இயல்பான அளவைவிட மிகவும்  குறைந்துவிடும். 

இதன்போது சிலருக்கு எலும்பு மஜ்ஜை பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். அதனைத் தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்துகளை வழங்கியும், நவீன மருந்தியல் சிகிச்சை மூலமாகவும் இவர்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர். இத்தகைய சிகிச்சைகளுக்குப் பிறகும் அவர்களின் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்றால்... அவர்களுடைய உடலில் வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு அவர்களின் உடலில் உள்ள மண்ணீரலை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பர்.‌

வைத்தியர் கோபால்சாமி
தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49